×

ஸ்வீட் கார்ன் புலாவ்

தேவையானவை

பாஸ்மதி அரிசி – 1 கப்
ஸ்வீட் கார்ன் – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 1
மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா – அரை
தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பட்டை வகைகள் – சிறிதளவு
எண்ணெய், நெய் – தேவைக்கேற்ப
புதினா – அரை கப்
தயிர் – அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.

செய்முறை:

குக்கரில், எண்ணெய் மற்றும் நெய் விட்டு, சூடானதும், பட்டை வகைகளை தாளிக்கவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியவுடன், இஞ்சி – பூண்டு விழுது மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும், மசாலா தூள்கள் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அதன்பின்னர், ஸ்வீட் கார்ன் சேர்த்து லேசாக வதக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து வதக்கவும். பின்னர், ஊற வைத்து களைந்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி, உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும். பின்னர், 1 கப் அரிசிக்கு ஒன்றரைகப் தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில்விட்டு இறக்கிவிடவும். ஸ்வீட் கார்ன் புலாவ் தயார்.

The post ஸ்வீட் கார்ன் புலாவ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!